குஜராத் மாநிலம் தனது முதல் இரண்டு காற்று நிரப்பப்பட்ட ரப்பர் அணைகளை சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெரான் ஆற்றின் குறுக்கேயும், தபி மாவட்டத்தில் உள்ள அம்பிகா ஆற்றின் குறுக்கேயும் கட்டி வருகிறது.
ராஜ்வசனா ரப்பர் அணை மற்றும் பதக்வாடி ரப்பர் அணை ஆகியவை நீர் சேமிப்பு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள மேலாண்மைக்காக தென் கொரியத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
காற்று நிரப்பப்பட்ட ரப்பர் அணையானது, நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும் ஊதக்கூடிய ரப்பர் பையைப் பயன்படுத்துகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் கூட்டாக ₹162 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டைக் கொண்டுள்ளதுடன் இவை SCADA (மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப் படுத்தல் - Supervisory Control and Data Acquisition) தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
இந்த அணைகள் நீர்ப்பாசனத்திற்கு ஆதரவளிப்பதுடன், கனமழையின் போது அதிகப் படியான நீர் மற்றும் வண்டலை வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் வெள்ளப் பெருக்குகளை நிர்வகிக்கவும் உதவும்.