முதல் சரக்கு வாகனப் பரிமாண வரம்பு மீட்சிப் போக்குவரத்து
June 19 , 2023 785 days 416 0
அசாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான சரக்கு வாகனப் பரிமாண வரம்பு மீட்சி சரக்குகளின் (ODC) முதல் சரக்குப் பெட்டகம் என்பது, நீர்வழிப் பாதைகள் வழியாக கொண்டு செல்லப் பட்டது.
இது இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் கப்பலான MV மரைன் 66 மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இது மார்ச் 18 ஆம் தேதியன்று, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு, இந்திய-வங்காள தேச நெறிமுறைப் பாதை வழியாக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பயணித்து NRL என்ற அணைக்கரை (ஜெட்டி) பகுதியினை அடைந்தது.