முதல் பனிப்பாறை ஏரி முன்னெச்சரிக்கை அமைப்பு - உத்தரகாண்ட்
October 4 , 2026 2 days 39 0
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள வசுந்தரா தாலில் தனது முதல் பனிப்பாறை ஏரி முன்னெச்சரிக்கை அமைப்பை நிறுவத் தொடங்கியுள்ளது.
இந்த அமைப்பு நீர் மட்டம், வானிலை, பனியின் ஆழம், தரை நகர்வு, மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் ஓட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (CBRI) ஆதரவுடன் வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் தலைமையிலான 22 அறிவியலாளர்கள் கொண்ட குழு இந்த அமைப்பை நிறுவி வருகிறது.
தேசியத் தொலை உணர்வு மையம் (NRSC) 2023 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் 344 பனிப்பாறை ஏரிகளை அடையாளம் கண்டுள்ளது, இதில் 13 ஏரிகள் அதிக ஆபத்து உள்ளவையாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) வகைப்படுத்தப் பட்டுள்ளன.
பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்திற்கு (GLOFs) எதிரான முன்னெச்சரிக்கையை வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.