TNPSC Thervupettagam

ராஜஸ்தானில் கானமயில் பாதுகாப்பு

October 4 , 2026 2 days 47 0
  • ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள பாலைவன தேசியப் பூங்காவில், முதல் முறையாக கூண்டில் வளர்க்கப்பட்ட கானமயில் (GIB) குஞ்சுகள் காடுகளில் விடப்பட உள்ளன.
  • இதன் IUCN நிலை மிக அருகி வரும் இனம் மற்றும் அறிவியல் பெயர் ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் (Ardeotis nigriceps) ஆகும்.
  • 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கானமயில் திட்டம் (Project GIB), ஜெய்சல்மரின் சாம் மற்றும் ராம்தேவ்ராவில் உள்ள பாதுகாப்பு மையங்களில் குறைந்தது 98 கானமயில்களை இனப்பெருக்கம் செய்துள்ளது.
  • காடுகளில் இவற்றின் எண்ணிக்கை 120-150 பறவைகள் மட்டுமே என்று மதிப்பிடப் பட்டுள்ளது, இதில் சுமார் 130 ± 20 பறவைகள் ராஜஸ்தானில் உள்ளன.
  • வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மின் கம்பிகளில் மோதுதல் ஆகியவை இதற்கு ஏற்படும் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
  • கானமயில்கள் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது, மேலும் இது 1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் மெதுவான இனப்பெருக்க விகிதத்தைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்