TNPSC Thervupettagam

முதல் பனிப்பாறை ஏரி முன்னெச்சரிக்கை அமைப்பு - உத்தரகாண்ட்

October 4 , 2026 2 days 38 0
  • உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள வசுந்தரா தாலில் தனது முதல் பனிப்பாறை ஏரி முன்னெச்சரிக்கை அமைப்பை நிறுவத் தொடங்கியுள்ளது.
  • இந்த அமைப்பு நீர் மட்டம், வானிலை, பனியின் ஆழம், தரை நகர்வு, மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் ஓட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும்.
  • உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (CBRI) ஆதரவுடன் வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் தலைமையிலான 22 அறிவியலாளர்கள் கொண்ட குழு இந்த அமைப்பை நிறுவி வருகிறது.
  • தேசியத் தொலை உணர்வு மையம் (NRSC) 2023 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் 344 பனிப்பாறை ஏரிகளை அடையாளம் கண்டுள்ளது, இதில் 13 ஏரிகள் அதிக ஆபத்து உள்ளவையாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்திற்கு (GLOFs) எதிரான முன்னெச்சரிக்கையை வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்