TNPSC Thervupettagam

முதல் பானிபட் போரின் 500 ஆண்டுகள் நிறைவு

April 23 , 2026 4 days 129 0
  • இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான முதல் பானிபட் போர் நடைபெற்று, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் 500 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
  • முதல் பானிபட் போர் 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று, தற்போதைய இந்தியாவின் ஹரியானாவில் உள்ள பானிபட்டில் நடைபெற்றது.
  • இது முகலாயப் பேரரசை நிறுவிய பாபருக்கும், டெல்லி சுல்தானகத்தின் கடைசி சுல்தானான இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது.
  • பாபர் மேம்பட்ட துலுக்மா தந்திரோபாயங்களையும் (பக்கவாட்டு நகர்வு), பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட களப் பீரங்கிகளையும் பயன்படுத்தினார், இது அவருக்கு ஒரு பெரிய பலனைக்க் கொடுத்தது.
  • இதில் பாபரின் கட்டுப்பாடான படை, லோடியின் பெரிய படையைத் தோற்கடித்ததுடன் இப்ராகிம் லோடியும் இப்போரில் கொல்லப்பட்டார்.
  • இந்த வெற்றியானது டெல்லி சுல்தானகத்தின் முடிவிற்கும், இந்தியாவில் முகலாயப் பேரரசு நிறுவப்படுவதற்கும் வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்