TNPSC Thervupettagam

முதல் மகளிர் NDA தொகுதி

June 15 , 2026 2 days 143 0
  • உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் (IMA) நடைபெற்ற பயிற்சியிறக்க அணிவகுப்பின் போது, தேசியப் பாதுகாப்பு அகாடமியின் (NDA) முதல் மகளிர் தொகுப்பினை சேர்ந்த ஒன்பது பெண் பயிற்சிப் படைவீரர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்டனர்.
  • இது 158-வது வழக்கமான கல்வி மற்றும் 141-வது தொழில்நுட்ப பட்ட கல்வி நிறைவைக் குறிக்கிறது.
  • இந்திய ராணுவ அகாடமி (IMA) உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ளது, இது இந்திய ராணுவத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • கூடுதலாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப் படை அகாடமியில், முதல் NDA மகளிர் தொகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண் பயிற்சிப் படை வீரர்கள் இந்திய விமானப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்