TNPSC Thervupettagam

ரத்த சோகை நிவிர்த்திக்கான ஊட்டச்சத்து சவால்

June 15 , 2026 2 days 85 0
  • இந்தியாவில் ரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதற்காக இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உருவாக்குவதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை புதுதில்லியில் ₹1 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட சவாலைத் தொடங்கின.
  • இந்த சவால் என்பது வளரிளம் பெண்கள் மற்றும் பேறுகால வயதுடைய பெண்களை இலக்காகக் கொண்டுள்ளது, அவர்களில் இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவர் (சுமார் 50%) ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தத் திட்டம் ஒரு வருட முன்மாதிரி உருவாக்கத்திற்கு சுமார் ₹1 கோடி வரையில் மானியங்களை வழங்குகிறது, மேலும் இது ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட தயாரிப்புகள் ஒரு வேளை உணவிற்கு 4-5 மி.கி இரும்புச்சத்தை வழங்க வேண்டும், மேலும் மலிவானதாகவும், அளவிடக்கூடியதாகவும் மற்றும் பிராந்திய ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு வடிவங்களில் செறிவூட்டப்பட்ட சிற்றுண்டிகள், காரமான தின்பண்டங்கள், பானங்கள், கம்மி மிட்டாய்கள் மற்றும் மெல்லக்கூடிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.
  • செறிவூட்டல் என்பது உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்த நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கும் செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்