TNPSC Thervupettagam

கிக் தொழிலாளர்கள் மீதான ILO ஒப்பந்தம்

June 15 , 2026 3 days 87 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) ஜெனீவாவில் நடந்த தனது 114-வது அமர்வில் 'ஒப்பந்த எண். 193: வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும் பொருளாதாரத்தில் கண்ணியமானது வேலை தொடர்பானது' என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
  • கிக் மற்றும் சாலையோர தொழிலாளர்களுக்கான பிணைக்கப்பட்ட தொழிலாளர் தரங்களை நிறுவும் முதல் உலகளாவிய ஒப்பந்தம் இதுவாகும்.
  • முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள விநியோகம் மற்றும் வாடகை வாகனச் சேவைத் தொழிலாளர்கள் உட்பட இணையவழி மற்றும் இருப்பிடம் சார்ந்த தொழிலாளர்கள் இருவரையும் இது உள்ளடக்குகிறது.
  • நியாயமான ஊதியம், சரியான தொழிலாளர் வகைப்பாடு, சமூகப் பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை, பாகுபாடின்மை மற்றும் பாதுகாப்பான பணி நிலைமைகளுக்கு இந்த ஒப்பந்தம் உத்தரவாதம் அளிக்கிறது.
  • இதற்கு நெறிமுறை வெளிப்படைத்தன்மை தேவை, கணக்கு முடக்கம் அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட கொடுப்பனவுகள் போன்ற முக்கியமான தானியங்கு முடிவுகளின் மனித மதிப்பாய்வை கோரும் உரிமையை தொழிலாளர்களுக்கு இது வழங்குகிறது.
  • குறைந்தபட்சம் இரண்டு உறுப்பு நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்த 12 மாதங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்