TNPSC Thervupettagam

முதல் மலையேறும் பயணம்

September 29 , 2026 2 days 51 0
  • லடாக்கில் 6,000 மீட்டருக்கு மேல் இதற்கு முன் ஏறப்படாத 20 சிகரங்களை 23 நாட்களில் குழுவினர் ஏறியதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று முதல் ஏற்ற மலையேறும் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் திராங்கை தளமாகக் கொண்ட தேசிய மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டு நிறுவனத்தைச் (NIMAS) சேர்ந்த 20 மலையேறுபவர்களால் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • NIMAS-இன் இயக்குனர் கர்னல் ரன்வீர் சிங் ஜம்வால் இந்த குழுவிற்கு தலைமை தாங்கினார்.
  • இந்தச் சிகரங்கள் லடாக் மலைத்தொடரின் சாம்செர்-லுங்செர், கியாமா நாலா மற்றும் சொகுலா பகுதிகளில் அமைந்துள்ளன.
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NIMAS மலையேறுதல் மற்றும் சாகசப் பயிற்சியை நடத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்