இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரவு 2026
September 29 , 2026 2 days 53 0
2025-26 நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வருடாந்திர அந்நிய நேரடி முதலீடாக (FDI) 94.53 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பதிவு செய்து உள்ளது, அதே நேரத்தில் 2014-15 ஆம் நிதியாண்டு முதல் 2025-26 ஆம் நிதியாண்டு வரையிலான ஒட்டுமொத்த முதலீடு 843 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி உள்ளது.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்கள் ₹2.40 லட்சம் கோடி முதலீட்டையும், உற்பத்தி/விற்பனையில் ₹23.8 லட்சம் கோடியையும், ஏற்றுமதியில் ₹15.2 லட்சம் கோடியையும் ஈர்த்துள்ளன.
PLI திட்டங்கள் 14.6 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன, மேலும் மின்னணுவியல், மருந்தகங்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) வன்பொருள் போன்ற துறைகளுக்குப் பயனளித்துள்ளன.
இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டமானது முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடனான சீர்திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று தனது 12-வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தநிலை வலையமைப்பு (ONDC) மூலம் 470 கோடிக்கும் அதிகமான ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.