TNPSC Thervupettagam

அதிகபட்ச பறவைகள் இனப்பெருக்கம் - பள்ளிக்கரணை

September 29 , 2026 12 hrs 0 min 58 0
  • சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 2026 ஆம் ஆண்டு வலசைப் பருவத்தில் பல பூர்வீகமற்ற பறவைகளின் அதிகபட்ச இனப்பெருக்க எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
  • ஜக்கானாக்கள்/தாழைக்கோழிகள் ஆகஸ்ட் மாதத்தில் 201 ஆகவும், செப்டம்பரில் 185 ஆகவும் அதிகரித்தன, இது 2014-ஆம் ஆண்டில் அவை சதுப்புநிலத்திற்குத் திரும்பியதிலிருந்து அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் 68 ஆக இருந்த செம்பழுப்புச் சீழ்க்கை வாத்துகள் (Fulvous whistling ducks) செப்டம்பரில் 1,155 என்ற சாதனை அளவை எட்டின.
  • செப்டம்பரில் 40 பறவைகள் மற்றும் குறைந்தது 23 குஞ்சுகளுடன் கறுப்பு வெள்ளை மைனாக்களும் (Pied mynas) பதிவு செய்யப்பட்டன.
  • மிதக்கும் தாவரங்கள், கரிமக் கழிவுகள் மற்றும் பொருத்தமான நீர் நிலைகள் இப்பறவைகளுக்குச் சாதகமான வாழ்விடத்தை உருவாக்கியிருக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்