மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) மூலம் வழக்காடப்பட்ட முதல் வனவிலங்கு குற்றமானது, வனவிலங்கு சட்ட அமலாக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறி ஷாஹ்தூஷ் சால்வைகளைச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததற்காக டெல்லி நீதிமன்றம் ஒருவருக்கு தண்டனை வழங்கியது.
மத்தியப் புலனாய்வுத் துறை, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம், சுங்கத் துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை கூட்டாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
திபெத்திய மான் வகையின் அடிப்பகுதி ரோமங்களில் இருந்து ஷாஹ்தூஷ் கம்பளி பெறப் படுகிறது.
பெரும்பாலான ஷாஹ்தூஷ் தயாரிப்புகள் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
CITES ஒப்பந்தத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு முதல், ஷாஹ்தூஷ் வர்த்தகம் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
சிரு என்று அழைக்கப்படும் இந்த மான் பந்தோலோப்ஸ் ஹோட்சோனி (Pantholops hodgsonii) என்ற அறிவியல் பெயரைக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கும் வலசை வரும் இது திபெத்தியப் பீடபூமி மற்றும் சீனாவின் சின்ஜியாங் மற்றும் கிங்காய் போன்ற குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்கிறது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அட்டவணை I மற்றும் IV, CITES-இன் கீழ் பின்னிணைப்பு I-இல் வைக்கப்பட்டுள்ள இது IUCN செந்நிறப் பட்டியலின் கீழ் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக உள்ளது.
சட்டவிரோத வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவை இதன் முக்கிய அச்சுறுத்தல்களில் அடங்கும்.