அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கை
April 18 , 2026 42 days 134 0
மாறிவரும் தொழிலாளர் சந்தைகளில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குவது குறித்த அறிக்கையைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டது.
இந்த அறிக்கை "Universal social protection in changing labour markets: Protecting workers in all types of employment" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு என்பது சுகாதாரப் பராமரிப்பு, வேலையின்மைக்கான ஆதரவு, மகப்பேறு பலன்கள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பலன்களை உள்ளடக்கியதாகும்.
வறுமையைக் குறைப்பது, பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளைக் களைவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.