TNPSC Thervupettagam

முதல் வனவிலங்கு குற்ற வழக்கு

April 18 , 2026 6 days 104 0
  • மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) மூலம் வழக்காடப்பட்ட முதல் வனவிலங்கு குற்றமானது, வனவிலங்கு சட்ட அமலாக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
  • 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறி ஷாஹ்தூஷ் சால்வைகளைச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததற்காக டெல்லி நீதிமன்றம் ஒருவருக்கு தண்டனை வழங்கியது.
  • மத்தியப் புலனாய்வுத் துறை, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம், சுங்கத் துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை கூட்டாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
  • திபெத்திய மான் வகையின் அடிப்பகுதி ரோமங்களில் இருந்து ஷாஹ்தூஷ் கம்பளி பெறப் படுகிறது.
  • பெரும்பாலான ஷாஹ்தூஷ் தயாரிப்புகள் ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • CITES ஒப்பந்தத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு முதல், ஷாஹ்தூஷ் வர்த்தகம் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • சிரு என்று அழைக்கப்படும்  இந்த மான் பந்தோலோப்ஸ் ஹோட்சோனி (Pantholops hodgsonii) என்ற அறிவியல் பெயரைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவிற்கும் வலசை வரும் இது திபெத்தியப் பீடபூமி மற்றும் சீனாவின் சின்ஜியாங் மற்றும் கிங்காய் போன்ற குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்கிறது.
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அட்டவணை I மற்றும் IV, CITES-இன் கீழ் பின்னிணைப்பு I-இல் வைக்கப்பட்டுள்ள இது IUCN செந்நிறப் பட்டியலின் கீழ் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக உள்ளது.
  • சட்டவிரோத வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவை இதன் முக்கிய அச்சுறுத்தல்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்