TNPSC Thervupettagam

கர்நாடகாவின் மாதவிடாய் விடுப்புக் கொள்கை

April 18 , 2026 6 days 99 0
  • மாதவிடாய் விடுப்புக் கொள்கையைச் சரத்து 21-இன் (வாழ்வதற்கான உரிமை) கீழ் அங்கீகரித்து, அனைத்துத் துறைகளிலும் அதனைக் கண்டிப்பாகச் செயல்படுத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 18-52 வயதுடைய பெண்களுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதை இக்கொள்கை கட்டாயமாக்குகிறது.
  • அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாராத் துறைகள் என இரண்டிலும் இக்கொள்கை சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
  • உயிரியல் வேறுபாடுகளை அங்கீகரிப்பது சரத்து 14-இன் கீழ் சமத்துவத்தை மீறுவதாகாது என்றும், மாறாக அது கண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.
  • முன்மொழியப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் கர்நாடக மாதவிடாய் விடுப்பு மற்றும் சுகாதார மசோதா இக்கொள்கையை முறைப்படுத்தும்; மேலும், இது சட்டமாக்கப்பட்ட பிறகு தாமதமின்றி இதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும்.
  • தொழிற்சாலைகள் சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம், பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் வரும் தொழிலாளர்களுக்குத் தற்போதைக்கு இக்கொள்கை பொருந்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்