TNPSC Thervupettagam

முன்னாள் படைவீரர் விதிகள் 2026

February 16 , 2026 17 hrs 0 min 27 0
  • முன்னாள் படைவீரர்கள் (மத்திய குடிமைபணிகள் மற்றும் பதவிகளில் மறு வேலை வாய்ப்பு) விதிகள், 2026 ஐ இந்திய அரசு திருத்தியது என்பதோடு இதன் மூலம் முன்னாள் படைவீரர்களின் வரையறையின் கீழ் ராணுவ செவிலியர் சேவையின் பணியாளர்களையும் சேர்த்துள்ளது.
  • இந்தத் திருத்தம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 309 இன் கீழ் அறிவிக்கப்பட்டது.
  • இராணுவச் செவிலியர் சேவை (MNS) அதிகாரிகளின் மறு வேலைவாய்ப்பு சலுகைகள் குறித்த முந்தைய குழப்பத்தை இது நீக்குகிறது.
  • MNS வீரர்கள் இப்போது குரூப் C பதவிகளில் 10% இட ஒதுக்கீட்டையும், மத்திய அரசின் குரூப் D பதவிகளில் 20% இடஒதுக்கீட்டையும் பெற தகுதியுடையவர்கள்.
  • அவர்கள் தங்கள் ராணுவச் சேவை ஆண்டுகளுடன் கூடுதலாக  மூன்று ஆண்டுகளுக்கு சமமான வயது தளர்வையும் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்