TNPSC Thervupettagam

மும்மொழிக் கொள்கை விவகாரம் - நாகாலாந்து

June 28 , 2026 9 days 117 0
  • தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் கீழ் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான CBSE வாரியத்தின் கட்டாய உத்தரவுக்கு நாகாலாந்தில் உள்ள அரசு உதவிபெறாத மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பள்ளிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
  • நாகாலாந்தில் 17 முக்கிய பழங்குடியின மொழிகள் உள்ளன. அங்கு பொதுவான பிராந்திய மொழி என்று ஒன்றுமில்லை. அதே சமயம் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாகவும் பயிற்று மொழியாகவும் உள்ளது.
  • பல மொழிகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் நிலையான பாடத்திட்டம் ஆகியவற்றின் பற்றாக்குறையை இம்மாநிலம் எதிர்கொள்கிறது.
  • மும்மொழிக் கொள்கையானது கோத்தாரி குழுவால் (1964-66) முதன்முதலில் பரிந்துரைக்கப் பட்டு, தேசிய கல்விக் கொள்கையில் (1968) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் கீழ் மாணவர்களுக்கு மூன்று மொழிகளை நெகிழ்வுத் தன்மையுடன் படிக்க அனுமதிக்கிறது, ஆனால் 10 ஆம் வகுப்பு வரை குறைந்தது இரண்டு இந்திய மொழிகளையாவது படிக்க வேண்டும் என்று CBSE கட்டாயப் படுத்துகிறது.
  • மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் ஹெர்ஃபிண்டால்-ஹிர்ஷ்மன் குறியீடு போன்ற கணித அளவீடுகளின்படி, நாகாலாந்து மிகவும் மொழிப் பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது.
  • இங்கு குறைந்தது 14 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும், அதன் முக்கியப் பழங்குடியினரால் பேசப்படும் 17 வட்டார மொழிகளும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்