போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையின் (ANTF) தலைவர்களின் மூன்றாவது தேசிய மாநாடு புது தில்லியில் நடைபெறுகிறது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் (NCB) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் மாநாடு, போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலைநோக்கு ஆவணத்தில் (2026-29) கவனம் செலுத்துகிறது.
ANTF-கள் என்பவை போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சிறப்பு பிரிவுகள் ஆகும்.
இம்மாநாடு போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள், தேவையைக் குறைத்தல், மறுவாழ்வு, செயற்கை போதைப்பொருட்கள், சட்டவிரோத சாகுபடி, டார்க்நெட் / இருண்ட வலைதளம் மற்றும் கிரிப்டோகரன்சி விசாரணைகளை உள்ளடக்கியது.
போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டம், 1985 என்பது இந்தியாவில் போதைப்பொருள் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் முக்கியச் சட்டமாகும்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) இந்தியாவின் மத்திய போதைப் பொருள் சட்ட அமலாக்க நிறுவனமாக 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.