2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் ஆற்றிய உரை ஒன்றில், மூன்று விவசாயச் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
இந்தியா முழுவதும் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வழி வகுத்த அந்த மூன்று சட்டங்களாவன
வேளாண் பொருட்களின் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாட்டு மற்றும் வசதி) சட்டம், 2020
அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020
விவசாயிகளுக்கான (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலையுறுதி மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், 2020.