புல்வாமா தாக்குதலின் போது பயங்கரவாதிகள் செல்லிடப் பேசிகளை தவிர்த்து மெய்நிகர் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு கொண்டதை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
இந்தத் தொழில்நுட்பத்தில் கணினியானது ஒரு தொலைபேசி எண்ணை உருவாக்குகின்றது. மேலும் பயனர்கள் தங்கள் திறன்பேசியில் சேவை வழங்குநரின் செயலியைப் பதிவிறக்கம் செய்து இதைப் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணை சமூக வலைதளங்களான கட்செவி அஞ்சல், முகநூல், டெலிகிராம் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் இணைத்து உடனடியாகப் பயன்படுத்தலாம்.