TNPSC Thervupettagam

மேகதாது தீர்மானம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

September 26 , 2026 6 days 129 0
  • காவிரி ஆற்றின் குறுக்கே முன்மொழியப்பட்ட மேகதாது அணை தொடர்பான திருத்தப் பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • திருத்தத்தின் போது அவையில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள், பின்னர் தங்களது சொந்த மௌனத்தின் அடிப்படையில் அதனை எதிர்க்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • தமிழ்நாடு-கர்நாடகா மேகதாது பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கை திருத்தப்பட்ட தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தது.
  • திருத்தப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப் பட்டதாகவும், நடவடிக்கைகளின் போது மனுதாரர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • நடைமுறை முறைகேடு என்ற அடிப்படையில் சட்டமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஆய்வு செய்வதை அரசியலமைப்பின் 212வது சரத்து வரம்பிற்கு உட்படுத்துகிறது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின் 286வது விதி, அவையில் எழும் நடைமுறை தொடர்பான கேள்விகளை முடிவெடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்