TNPSC Thervupettagam

மேகாலயா மழைப்பற்றாக்குறை

September 23 , 2026 11 days 117 0
  • செப்டம்பர் 15 நிலவரப்படி இயல்பை விட 59% குறைவான மழைப்பொழிவுடன் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிகபட்ச மழைப் பற்றாக்குறையை மேகாலயா பதிவு செய்துள்ளது.
  • "மேகங்களின் இருப்பிடம்" என்று அழைக்கப்படும் மேகாலயாவில் உள்ள 11 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் பற்றாக்குறை அல்லது அதிக பற்றாக்குறையான மழைப்பொழிவை எதிர்கொள்கின்றன.
  • மேற்கு ஜெயின்டியா மலைகள் 79% என்ற அளவில் அதிகபட்ச பற்றாக்குறையையும், கிழக்கு காசி மலைகள் 53% குறைவான மழையையும் பதிவு செய்துள்ளன.
  • சுமார் 80% கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீரூற்றுகளையே பெரிதும் நம்பியுள்ளன, இதனால் வறண்ட பருவமழை விவசாயம் மற்றும் நீர் விநியோகத்திற்கு கவலையை ஏற்படுத்துகிறது.
  • 1989 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான மேகாலயாவின் பருவமழையில் குறிப்பிடத்தக்க சரிவுப் போக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவு காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்