மைத்ரி சேது பாலமானது பெனி நதியின் மீது கட்டப்பட்டு வருகின்றது.
பெனி நதியானது திரிபுரா மாநிலம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையிலான இந்திய எல்லைப் பகுதியில் பாய்கின்றது.
1.9 கிலோ மீட்டர் நீளமுடைய இந்தப் பாலமானது இந்தியாவில் உள்ள சப்ரூம் என்ற பகுதியினை வங்க தேசத்தில் ராம்கார்க் என்ற பகுதியுடன் இணைக்கின்றது.
இது தொடங்கி வைக்கப் பட்டதின் மூலம், திரிபுராவானது வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தை அணுகுவதுடன் “இந்தியாவிற்கான வடகிழக்கின் நுழைவு வாயில்” (Gateway of North East) என்ற பெருமையைப் பெற உள்ளது.