TNPSC Thervupettagam

முகத்தை மறைத்தல் மீதான தடை – சுவிட்சர்லாந்து

March 11 , 2021 1617 days 792 0
  • சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பொது ஜன வாக்கெடுப்பில் முஸ்லீம் பெண்களால் புர்கா மற்றும் நிக்காப் உள்ளிட்டவற்றை அணிந்து பொது இடங்களில் தங்கள் முகத்தை மறைத்தல்  மீதான தடைக்கு சுவிட்சர்லாந்து  ஆதரவாக வாக்களித்துள்ளது.
  • அந்நாட்டின் நேரடி மக்களாட்சி அமைப்பின் கீழ் தங்களது சொந்த விவகாரங்களில் முடிவெடுக்க அந்நாட்டு மக்களுக்கு நேரடி முடிவெடுக்கும் அதிகாரமானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவர்கள் தேசிய மற்றும் பிராந்திய அளவிலான பொது ஜன வாக்கெடுப்புகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக வாக்களிக்க வேண்டி தொடர்ந்து அழைக்கப் படுகின்றனர்.
  • 2011 ஆம் ஆண்டில் பொது இடங்களில் புர்காக்கள் மற்றும் நிக்காப்கள் ஆகியவற்றை  அணிவதற்குத் தடை விதித்த முதலாவது ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்