TNPSC Thervupettagam

யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு

February 13 , 2026 4 days 42 0
  • ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்தியுள்ளது.
  • தண்டவாளங்களுக்கு அருகில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய இந்திய ரயில்வே AI-இயக்கப்பட்ட ஊடுருவல் கண்டறிதல் அமைப்பை (IDS) அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த அமைப்பு ஒளியிழை வடங்களில் நிறுவப்பட்ட பகிரப்பட்ட ஒலி உணர்விகளை (DAS) பயன்படுத்துகிறது.
  • இது ரயில்களை வேகத்தைக் குறைக்க அல்லது நிறுத்தக் கோரி ரயில் ஓட்டுனர்கள், நிலைய மேலாளர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டு அறைகளுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
  • இந்த அமைப்பு தற்போது வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் (NFR) 141 தட கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான இடங்களில் செயல்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்