TNPSC Thervupettagam

யுனெஸ்கோ பட்டியல் - சிவசாகர் பாரம்பரியத் தளம்

September 8 , 2026 5 days 110 0
  • அஸ்ஸாமில் உள்ள ரங்க்பூர்-சிவசாகர் வரலாற்றுத் தொகுப்பு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • கலாச்சார அளவுகோல்கள் (iii) மற்றும் (iv) ஆகியவற்றின் கீழ் இந்தியா தனது பரிந்துரை ஆவணத்தை யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்தது.
  • இந்தத் தொகுப்பில் ரங் கர், தலாடல் கர், நாம்தாங் கல் பாலம் மற்றும் சிவசாகர், ஜெய்சாகர் மற்றும் கௌரிசாகர் ஆகியவற்றின் பெரிய குளங்கள் அடங்கும்.
  • அஹோம் வம்சம் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை கி.பி. 1228 முதல் 1826 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது என்பதோடு அதன் அரசியல் மற்றும் சடங்கு மையம் சிவசாகர் பிராந்தியத்தில் இருந்தது.
  • இந்தச் சேர்க்கை மற்றும் பிற மூன்று இடங்களுடன், இந்தியாவின் யுனெஸ்கோ தற்காலிகப் பட்டியல் 73 இடங்களை எட்டியது.
  • அஹோம்களின் அரச அடக்க மேடுகளான சரைடியோ மொய்தாம்கள் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் 43வது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமாக மாறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்