யூக்ளிட் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை ஆய்வு செய்ய உதவும் என்ற வகையில் அறியப்பட்டதிலேயே மிகப் பழமையான குவாசர்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபஞ்சம் தோன்றி சுமார் 670 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த கால கட்டத்தைச் சேர்ந்த வகையில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே பழமையான இரண்டு குவாசர்கள் உட்பட 31 குவாசர்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குவாசர் என்பது மிகப்பிரம்மாண்டமான கருந்துளையால் (supermassive black hole) இயக்கப் படும் தொலைதூர விண்மீன் திரளின் மிகவும் பிரகாசமான மையப் பகுதி ஆகும்.
2023-ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) யூக்ளிட் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.
இந்தப் பிரபஞ்சத்தின் "இருண்ட காலத்திற்குப்" பிறகு முதல் விண்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்கள் உருவான 'மறு-அயனியாக்க சகாப்தத்தை' சேர்ந்தவை இந்த குவாசர்கள் ஆகும்.