TNPSC Thervupettagam

அரிய வகை ரேடியோ விண்மீன் திரள் – RAD BAARG

July 11 , 2026 6 days 75 0
  • பூமியிலிருந்து சுமார் 2 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள வில் மற்றும் அம்பு வடிவிலான அரிய வகை ரேடியோ விண்மீன் திரளை (RAD-BAARG) இந்திய ஆராய்ச்சிக் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
  • சுமார் 1.8 மில்லியன் ஒளியாண்டுகள் அகலம் கொண்ட RAD-BAARG (வில் மற்றும் அம்பு ரேடியோ விண்மீன் மண்டலம்), LOFAR (குறைந்த அதிர்வெண் வரிசை இரண்டு-மீட்டர் விண்வெளி ஆய்வு) தரவுகளைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் குடிமக்கள் அறிவியல் வானியல் ஆராய்ச்சித் தளமான 'RAD@home Astronomy Collaboratory'-ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இது கண்டறியப்பட்டது.
  • ரேடியோ விண்மீன் திரள் என்பது மிகப்பிரம்மாண்டமான கருந்துளையால் இயக்கப் பட்டு, அதிக அளவிலான ரேடியோ அலைகளை வெளியிடும் ஒரு செயலில் உள்ள விண்மீன் திரளாகும்.
  • சூப்பர்சோனிக் விமானத்தால் (மீயொலி வேக விமானம்) உருவாக்கப்படும் அதிர்வலையைப் போன்று, இந்த விண்மீன் திரளானது விண்மீன் திரள் கூட்டத்தின் வழியாக மீயொலி வேகத்தில் நகர்ந்து, ஒரு பிரம்மாண்டமான வில் போன்ற அதிர்வை உருவாக்குவதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்