TNPSC Thervupettagam

உலகளாவிய உயிரி எரிபொருள் போக்குகள் 2035

July 11 , 2026 6 days 61 0
  • 2035-ஆம் ஆண்டு வரை உலகளாவிய உயிரி எரிபொருள் உற்பத்திக்கான முக்கிய ஆதாரமாக உணவுப் பயிர்களே தொடர்ந்து இருக்கும் என 'OECD-FAO வேளாண்மைப் பார்வை 2026-2035' என்ற அறிக்கை தெரிவித்துள்ளது.
  • சோளம், கரும்பு, தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் முதல் ஆரம்பகால உயிரி எரிபொருட்கள் உலகளாவிய உயிரி எரிபொருள் சந்தைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும்.
  • பயிர் எச்சங்கள் மற்றும் மர உயிரிப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இரண்டாம் கட்ட உயிரி எரிபொருட்களின் உற்பத்திப் பங்கு பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.
  • சோளத்தை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு உலகளாவிய எத்தனால் உற்பத்தி ஆனது 2035-ஆம் ஆண்டுக்குள் 162.5 பில்லியன் லிட்டரை எட்டும் என மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • உலகளாவிய உயிரி எரிபொருள் தேவையின் வளர்ச்சியில் 80 சதவீதத்தை இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த அறிக்கையை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (OECD) மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை கூட்டாக வெளியிட்டு உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்