உலகளவில் பெண்களைப் பயிற்றுவிப்பதற்கான அறக்கட்டளை (Foundation to Educate Girls Globally) என்றும் அழைக்கப்படும் Educate Girls, 2025 ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருதை வென்றுள்ளது.
1958 ஆம் ஆண்டு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்திய இலாப நோக்கற்ற அமைப்பு இதுவாகும்.
இந்தியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பின்தங்கிய பெண்களுக்கான கல்வியை ஊக்குவிப்பதில் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணியை இந்த விருது அங்கீகரிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் மாலத்தீவின் ஷாஹினா அலி மற்றும் பிலிப்பைன்ஸின் ஃபிளேவியானோ அன்டோனியோ L. வில்லனுவேவா ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து Educate Girls அமைப்பு இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரமோன் மகசேசே விருது, மாறுதல் மிக்க தலைமையை கௌரவிக்கிறது மற்றும் முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் நினைவாக நிறுவப்பட்டது.
1958 ஆம் ஆண்டு முதல், ஆசியா முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த விருதைப் பெற்றுள்ளன.