TNPSC Thervupettagam

ராசிமணல் அணைத் திட்டம்

June 25 , 2026 3 days 129 0
  • மேகதாது திட்டத்திற்கு மாற்றாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராசிமணல் அணை கட்ட ஒரு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த அணை 66 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்டதாகவும், மேட்டூர் அணைக்கு மேல்புறத்தில் அமைந்திருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் 360 மெகாவாட் (MW) நீர்மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 1961-ஆம் ஆண்டு ராசிமணலில் அணை கட்டுவதற்கு அப்போதைய முதலமைச்சர் திரு. கே. காமராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • தண்ணீர் மற்றும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே ஒரு கூட்டுத் திட்டமாக இது அமையலாம் என இந்த முன்மொழிவு பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்