பதிவுச் சட்டத்தின் 34-C பிரிவை அரசியலமைப்புக்கு முரணானது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
சொத்து உரிமை தொடர்பான வழக்குகளை முடிவு செய்யும் உரிமை சிவில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளதால், ஒரு சார்பதிவாளர் அதனைத் தீர்மானிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த விதிகள் அரசியலமைப்பின் 14-வது சரத்து (சமத்துவ உரிமை) மற்றும் 300A-வது சரத்து (சொத்துரிமை) ஆகியவற்றை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படாத பட்சத்தில் சில பூர்வீக சொத்துக்களின் பதிவை மறுக்க 34-C பிரிவு சார்பதிவாளர்களுக்கு அதிகாரம் அளித்திருந்தது.
தமிழ்நாடு முழுவதும் விரிவான வில்லங்கப் பதிவேடுகளை தயாரித்து புதுப்பிக்குமாறும் பதிவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.