ராஜஸ்தானின் முதலாவது எண்ணெய் சுத்திகரிப்பாலை பார்மீர்
January 18 , 2018 2726 days 1010 0
ராஜஸ்தானின் பார்மீரில் உள்ள பச்பத்ராவில் ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பாலை (HPCL Rajasthan Refinery - HRRL) அமைக்கப்படுவதற்கான பணிகளை இந்தியப் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதுவே ராஜஸ்தானில் அமையப் பெறும் முதலாவது எண்ணெய் சுத்திகரிப்பாலை ஆகும்.
இத்திட்டத்தினை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் (Hindustan Petroleum Corporation Ltd) ராஜஸ்தான் அரசாங்கமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.
பார்மீர் சுத்திகரிப்பாலையானது முதலாவது ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு வளாகம் ஆகும். இந்த ஆலையானது ஆரம்பம் முதலே பெட்ரோ கெமிக்கல் சேர்க்கப்பட்ட ஒன்றாக இருக்கப் போகிறது. பொதுவாக பெட்ரோ கெமிக்கல்களை கடைசியாகத் தான் சேர்ப்பர்.