ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள பாலைவன தேசியப் பூங்காவில், முதல் முறையாக கூண்டில் வளர்க்கப்பட்ட கானமயில் (GIB) குஞ்சுகள் காடுகளில் விடப்பட உள்ளன.
இதன் IUCN நிலை மிக அருகி வரும் இனம் மற்றும் அறிவியல் பெயர் ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் (Ardeotis nigriceps) ஆகும்.
2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கானமயில் திட்டம் (Project GIB), ஜெய்சல்மரின் சாம் மற்றும் ராம்தேவ்ராவில் உள்ள பாதுகாப்பு மையங்களில் குறைந்தது 98 கானமயில்களை இனப்பெருக்கம் செய்துள்ளது.
காடுகளில் இவற்றின் எண்ணிக்கை 120-150 பறவைகள் மட்டுமே என்று மதிப்பிடப் பட்டுள்ளது, இதில் சுமார் 130 ± 20 பறவைகள் ராஜஸ்தானில் உள்ளன.
வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மின் கம்பிகளில் மோதுதல் ஆகியவை இதற்கு ஏற்படும் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
கானமயில்கள் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது, மேலும் இது 1-2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் மெதுவான இனப்பெருக்க விகிதத்தைக் கொண்டுள்ளது.