TNPSC Thervupettagam

ராதாபுரம் தேர்தல் குறித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு

June 5 , 2026 13 days 167 0
  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் திரு. ஐ.எஸ். இன்ப துரை வெற்றி பெற்றதை சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், திரு. எம். அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவித்தது.
  • 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரு. இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டார்.
  • பின்னர், 104 வாக்குகள் வித்தியாசத்தில் திரு. அப்பாவு தான் உண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றார் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2016-2021 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கான ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திரு. அப்பாவுவின் பெயரை மாற்றியமைக்க தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே நடைபெற்று விட்டதைச் சுட்டிக்காட்டிய இந்திய உச்ச நீதிமன்றம், இனிமேல் இதில் மேல் நடவடிக்கை எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறி 2026 ஆம் ஆண்டு மே 21 அன்று இந்த வழக்கை முடித்து வைத்தது.
  • திரு. இன்பதுரை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தனது பதவிக்காலத்தை முடித்து விட்டதால், அவரை முன்தேதியிட்டு பதவியில் இருந்து நீக்குவதோ அல்லது 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்பப் பெறுவதோ சாத்தியமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்