TNPSC Thervupettagam

ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

October 7 , 2025 12 days 44 0
  • 2026–27 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்தல் பருவத்திற்கான அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை (MSP) உயர்த்துவதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்தது.
  • குங்குமப் பூவின் அதிகபட்ச MSP உயர்வு ஆனது குவிண்டாலுக்கு 600 ரூபாய் ஆகும்.
  • அதைத் தொடர்ந்து, குவிண்டாலுக்கு பருப்பு வகைகளுக்கு (மசூர்) 300 ரூபாய், ராப்சீட் மற்றும் கடுகு ஆகியவற்றிற்கு 250 ரூபாய், கடலைப் பருப்பிற்கு 225 ரூபாய், பார்லிக்கு 170 ரூபாய், மற்றும் கோதுமை 160 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2025–26 முதல் 2030–31 ஆம் ஆண்டு வரையில் உள்நாட்டு உற்பத்தியை 350 லட்சம் டன்களாக உயர்த்துவதற்காக 11,440 கோடி ரூபாய் செலவில் பருப்பு வகைகளின் உற்பத்தியில் ஆத்மநிர்பாரதா (தன்னிறைவு) திட்டத்தினையும் மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
  • பருப்பு வகைகள் திட்டம் ஆனது மேம்படுத்தப்பட்ட விதைகள், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலைக்கு ஏற்ற பயிர் வகைகளை கொள்முதல் செய்வதன் மூலம் இரண்டு கோடி விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்