டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (FRS) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டில் FRS ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது தந்தை எம்.எஸ். சுவாமி நாதனுடன் இணைந்து இந்த மதிப்பைப் பெறும் இந்தியாவின் முதல் தந்தை-மகள் இணை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ராயல் சொசைட்டி 1660 ஆம் ஆண்டில் ஐக்கிய பேரரசில் (UK) நிறுவப்பட்டது. மேலும் இதன் உறுப்பினர் பதவி உலகின் தலைசிறந்த அறிவியல் கௌரவங்களில் ஒன்றாகும்.
குழந்தை நல மருத்துவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் சௌமியா காசநோய் (TB), மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் உலகளாவிய பொது சுகாதாரம் குறித்த அவரது பணிகளுக்காக அறியப்பட்டவர்.
இவர் முன்னதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை அறிவியலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
ககன்தீப் காங்குக்கு அடுத்தபடியாக ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியப் பெண் அறிவியலாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.