TNPSC Thervupettagam

ரைசினா அறிவியல் தூதரக முன்னெடுப்பு (RSDI) 2026

January 13 , 2026 36 days 161 0
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 2026 ஆம் ஆண்டிற்கான ரைசினா அறிவியல் தூதரக முன்னெடுப்பை (RSDI) தொடங்கியுள்ளது.
  • புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலில் அறிவியல் ராஜதந்திரத்தை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • RSDI, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஆளுகை, ஆராய்ச்சிப் பாதுகாப்பு, தொழில் நுட்பக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் உலகளாவியத் தரநிலைகளில் சமமான பங்கேற்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் தளமானது, முழுமையான அமர்வுகள் மற்றும் நிபுணர்களின் வட்டமேசை கூட்டங்கள் மூலம் அறிவியலாளர்கள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்களை ஈடுபடுத்தும்.
  • இந்த முன்னெடுப்பு, 2026 ஆம் ஆண்டு மார்ச் 5 முதல் 7 ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெறும் ரைசினா உரையாடலுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
  • இது, உலகளாவிய அறிவியல்சார் தூதரக உறவில், குறிப்பாக உலகத்தின் தெற்கு நாடுகளுக்காக, இந்தியாவின் பங்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்