இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவின் மிகவும் திறமையான டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2017 ஆம் ஆண்டில், பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடாவைச் சேர்ந்த கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியுடன் விளையாடி, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
ATP போட்டிகளில், ஆறு மாஸ்டர்ஸ் 1000 வெற்றிகள் உட்பட போபண்ணா ஒட்டு மொத்தமாக 26 பட்டங்களை வென்றுள்ளார்.
அவர் 2024 ஆம் ஆண்டில் ஆடவர் இரட்டையர் போட்டியில் உலகின் முன்னணி வீரர் என்ற தரவரிசையையும் பெற்றார்.