2025 ஆம் ஆண்டு FIDE உலக சதுரங்கக் கோப்பை போட்டியானது கோவாவில் தொடங்கியது.
இப்போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக பெயரிடப் பட்ட விஸ்வநாதன் ஆனந்த் கோப்பை வெளியிடப்பட்டது.
மயில் வடிவமைப்பு (இந்தியாவின் தேசியப் பறவை) இடம் பெற்றிருந்த இந்தக் கோப்பை "இந்தியாவின் சதுரங்கப் புரட்சியின் சின்னம்" என்று விவரிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா FIDE உலகக் கோப்பை போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஐதராபாத்தில் நடைபெற்ற கடைசி போட்டியின் போது, ஆனந்த் ருஸ்தம் காசிம்ட்ஜானோவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.