பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 13 தங்கம், 18 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் உட்பட இந்தியா 48 பதக்கங்களை வென்றது.
மகளிர் கபடி அணி ஈரான் அணியைத் தோற்கடித்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றது.
பிரதீஸ்மிதா போய் மகளிருக்கான 44 கிலோ பளுத்தூக்குதல் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் உலக இளையோர் சாதனையைப் படைத்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.
மகளிருக்கான குராஷ் போட்டியில் வெண்கலம் வென்ற குஷி இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றார்.
ரஞ்சனா யாதவ் 5000 மீட்டர் பந்தயத்தில் (வேகநடை) வெள்ளி வென்று இந்தியாவின் முதல் தடகளப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் பதக்க எண்ணிக்கையானது, செனகலின் டாக்கரில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்களைத் தகுதிப் பெறச் செய்தது.