நாடு முழுவதும் சிறப்பு நிகழ்வுகளுடன் இந்திய ஹாக்கி அமைப்பின் 100 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 550 மாவட்டங்களில் 1400க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் முதன்மைப் போட்டியானது புது டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
ஹாக்கி ஜாம்பவான்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதோடு, மேலும் "இந்திய ஹாக்கியின் 100 ஆண்டுகள்" என்ற நினைவுப் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்திய ஹாக்கியின் பயணம் ஆனது, 1925 ஆம் ஆண்டில் ஹாக்கி விளையாட்டைத் தேசிய அளவில் நிர்வகிக்கவும் ஊக்குவிக்கவும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (IHF) உருவாக்கப்பட்டதுடன் தொடங்கியது.