TNPSC Thervupettagam

லகடாங் மஞ்சள் - மேகாலயா

June 30 , 2026 7 days 107 0
  • பிரான்ஸில் நடைபெற்ற 52-வது G7 உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேகாலயாவின் லகடாங் மஞ்சள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது.
  • இது 2024-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தைப் பெற்றதுடன் பரவலான வணிக வகைகளில் 2-3% குர்குமின் மட்டுமே உள்ள நிலையில், இது அதிக அளவிலான (7-12%) குர்குமின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால் பிரபலமாக அறியப்படுகிறது.
  • கிழக்கு மேகாலயாவின் ஜெயின்டியா மலைகளில் உள்ள 43 கிராமங்களில் சுமார் 14,000 விவசாயிகளால் இது பாரம்பரியமாக இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுகிறது.
  • லகடாங் மஞ்சளுக்கான வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை நறுமணப் பொருட்கள் பதப்படுத்தும் மையமானது 2026 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் போய்ரிம்போங்கில் திறக்கப்பட்டது.
  • 2030-ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மஞ்சள் ஏற்றுமதியை மேற்கொள்ள இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்