TNPSC Thervupettagam

லக்குண்டி மறைக்கப்பட்ட நினைவிடங்கள் – கர்நாடகா

September 9 , 2026 4 days 70 0
  • கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்குண்டியில் மறைந்துள்ள நினைவிடங்களைக் கண்டறிய தொழில்நுட்ப அடிப்படையிலான ஆய்வு மேற் கொள்ளப் படவுள்ளது.
  • தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் துறை (DAMH), பெங்களூருவில் உள்ள உயரிட ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்துடன் (NIAS) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • தொழில்நுட்பங்களில் ஒளி கண்டறிதல் மற்றும் தூரம் அளவிடுதல் (LiDAR), புவியியல் தகவல் அமைப்பு (GIS), தொலை உணர்வு மற்றும் தரை ஊடுருவும் ரேடார் (GPR) ஆகியவை அடங்கும்.
  • தாவரங்களின் கீழ் மறைந்துள்ள அமைப்புகளைக் கண்டறிய ஆளில்லா விமான ஆய்வுகள் மற்றும் புகைப்பட அளவீடுகளும் பயன்படுத்தப்படும்.
  • கல்யாண சாளுக்கியர்களின் கீழ் 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் லக்குண்டி ஒரு முக்கிய நகர மையமாக இருந்தது.
  • இதன் கோயில்கள் நகரா, திராவிட மற்றும் பூமிஜா கட்டடக் கலை பாணிகளை இணைக்கும் வேசரா பாணியைக் காட்டுகின்றன.
  • லக்குண்டியை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் முன்மொழிய கர்நாடகா விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்