அறிவியலாளர்கள் சமீபத்தில் விளக்கியுள்ள லடாக் மாக்மா வளைவின் பரிணாமம் ஆனது, கிட்டத்தட்ட 130 மில்லியன் ஆண்டுகால விரிவான புவியியல் வரலாற்றை வெளிப் படுத்துகிறது.
மில்லியன் கணக்கான ஆண்டுகளில் யூரேசிய தட்டிற்கு அடியில் 'நியோ-டெதிஸ்' பெருங்கடல் தட்டு தொடர்ந்து அமிழ்ந்ததால் இது உருவானது.
இந்த வளைவு ஜூராசிக் முதல் ஈயோசீன் காலம் வரையிலான (தோராயமாக 201 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) நீண்ட புவியியல் காலப்பகுதியில் உருவானது.
இந்த வளைவின் முக்கியமான புவியியல் கூறுகளில் 'டிராஸ்-நிடார் தீவு வளைவு வளாகம்' மற்றும் 'லடாக் பாத்தோலித்' (Ladakh Batholith) ஆகியவை அடங்கிய நிலையில் இவை மதிப்புமிக்க பாறை பதிவுகளைக் கொண்டுள்ளன.
மாக்மா பரிணாமத்தின் மூன்று முக்கிய நிலைகளைக் காட்டுகிற இந்த வளைவு மாறிவரும் புவித்தட்டு நிலைகளையும் இந்தியத் தட்டுடனான இறுதி மோதலையும் பிரதிபலிக்கிறது.