இந்தியக் கடற்படையானது, பித்ரா தீவில் ஒரு புதிய கடற்படைப் பிரிவை நிறுவ உள்ளது என்ற நிலையில்இது 2026 ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விமானப்படையானது அதன் அகட்டி விமானப்படை தளத்தினை விரிவுபடுத்தி மினிகாயில் ஒரு புதிய விமான தளத்தை உருவாக்கி வருகிறது.
கப்பல் போக்குவரத்து, கடற்கொள்ளையர் சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீன நாட்டின் ஈடுபாடு காரணமாக லட்சத்தீவுகள் உத்தி சார் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்தியக் கடற்படையானது ஏற்கனவே மினிகாயில் INS ஜடாயு மற்றும் கவரட்டியில் INS த்வீப்ரக்சக் ஆகியவற்றை இயக்குகிறது.