TNPSC Thervupettagam

இந்தியாவின் உள்ளடக்கிய வகையிலான நிதி கட்டமைப்பு 2025–30

December 7 , 2025 17 days 78 0
  • 2025–30 ஆம் ஆண்டுகளுக்கான NSFI (நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய உத்திமுறை) ஆனது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு சபையின் (FSDC-SC) துணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த உத்தியானது, இந்தியா முழுவதும், குறிப்பாக வசதி சரியாக வழங்கப்படாத குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதிச் சேவைகளின் அணுகல், பயன்பாடு மற்றும் பரவலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • NSFI 2025–30 ஆனது பஞ்ச்-ஜோதி எனும் 47 நடவடிக்கை அம்சங்களைக் கொண்ட ஐந்து-நோக்கக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்துகிறது.
  • நிதி சார் கல்வியறிவு, வாடிக்கையாளர் பாதுகாப்பு, பாலினங்களுக்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் கடை நிலை அணுகல் ஆகியவை இதில் கவனம் செலுத்தப்படும் பகுதிகளில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்