TNPSC Thervupettagam

லைடன் செப்பேடுகள்

May 31 , 2026 17 days 178 0
  • சோழப் பேரரசின் முக்கிய ஆவணமாகத் திகழும் லைடன் செப்பேடுகள், நெதர் லாந்தின் ஹேக் நகரில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தால் அதிகாரப் பூர்வமாக இந்தியாவிடம் திருப்பியளிக்கப்பட்டன.
  • இந்த செப்பேடுகளில் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகள் உள்ளன என்பதோடு அவை நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரைக்கு வழங்கப் பட்ட நில மானியங்களை பதிவு செய்கின்றன.
  • சோழர்களின் நிர்வாகம், நில வருவாய், கடல்வழி வர்த்தகம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான கலாச்சார தொடர்புகள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை இந்தக் கல்வெட்டுகள் வழங்குகின்றன.
  • இதில் உள்ள பெரிய தொகுப்பு 21 செப்பேடுகளைக் கொண்டுள்ளது (16 தமிழ் மொழியிலும் மற்றும் 5 கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட சமஸ்கிருதத்தில் உள்ளன). இவை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவை.
  • ஸ்ரீவிஜயத்தின் (ஜாவா) சைலேந்திர ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட புத்த மடாலயத்திற்கு சோழர்கள் அளித்த ஆதரவை இந்த செப்பேடுகள் பதிவு செய்வதுடன் இது இந்தியா-தென்கிழக்கு ஆசியா இடையேயான வலுவான உறவுகளைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்