TNPSC Thervupettagam

லோக்தாக் ஆரம்ப கால-விண்மீன் தொகுப்பு கண்டுபிடிப்பு

May 28 , 2026 2 days 51 0
  • இந்திய வானியற்பியலாளர் ரொனால்டோ லைஷ்ராம், லோக்தாக் ஆரம்ப கால-விண்மீன் தொகுப்பு ஒன்றைக் கண்டறிந்த சர்வதேசக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்த விண்மீன் மண்டல ஆரம்ப கால-விண்மீன் தொகுப்பானது, பிரபஞ்சம் சுமார் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது, ​​அதாவது சுமார் 12.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
  • இந்த விண்மீன் குழுக்கள் மணிப்பூரில் உள்ள லோக்தாக் ஏரியில் காணப்படும் மிதக்கும் ஃபும்திகளைப் போல இருந்ததால், வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்தாக் ஏரியின் பெயர் இந்த அமைப்புக்குச் சூட்டப்பட்டது.
  • ஆரம்ப கால-விண்மீன் தொகுப்பு என்பது விண்மீன் தொகுப்புகளின் ஆரம்பக் கட்ட செறிவாகும் என்பதோடு இது பின்னர் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான விண்மீன் தொகுப்புகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான விண்மீன் பேரடைக் தொகுப்பாக உருவெடுக்கிறது.
  • ஆரம்ப கால-விண்மீன் தொகுப்பு நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விண்மீன் பேரடைச் செறிவுகளைக் கொண்டுள்ள லோக்தாக் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மற்றும் சுபாரு தொலைநோக்கி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்